Idhayam Oppikkum [இதயம் ஒப்பிக்கும்] [Aayat [आयात]] lyrics
Songs
2024-12-24 11:08:17
Idhayam Oppikkum [இதயம் ஒப்பிக்கும்] [Aayat [आयात]] lyrics
இதயம் ஒப்பிக்கும் உன்னை
இதயம் ஒப்பிக்கும் உன்னை
கவிதை ஒன்றைப் போல்
நெஞ்சம் பின்பற்றும் உன்னை
நெஞ்சம் பின்பற்றும் உன்னை
கொண்டாடும் மரபைப் போல்
இதயம் ஒப்பிக்கும் உன்னை
மரணம் எனைத் தொடும் வரையில்
மரணம் எனைத் தொடும் வரையில்
நீ தானே சுவாசமாய்
இதயம் ஒப்பிக்கும் உன்னை
என் இதயம் ஒப்பிக்கும் உன்னை
கவிதை ஒன்றைப் போல்
என் காதலுக்கு இரத்தம்... பெண்ணே
உனது எண்ணமே
என் நெஞ்சின் துடிப்பு எல்லாம்... காதல் சின்னமே
உலகம் என்ற பந்தின் உள்ளே
உலகம் என்ற பந்தின் உள்ளே, காதல் பிறக்குமே
காதல் என்ற சொல்லுக்குள்ளே அண்டம் அடங்குமே
எந்தன் காயம் ஆற்றிடும் காற்றாய்
ஆனாயே எந்தன் வானே
ஒரு பண்டிகை என உன்னை
தினம் கொண்டாடினேனே
தொழுகை என்றாகினாயே
தொழுகை என்றாகினாயே
விழிகள் நான் மூடவே
இதயம் ஒப்பிக்கும் உன்னை
இதயம் ஒப்பிக்கும் உன்னை
கவிதை ஒன்றைப் போல்
- Artist:Bajirao Mastani (OST)