காதலே, என் வானிலே [Can You Feel The Love Tonight] [Kadhalaa yen vaanile] [English translation]
காதலே, என் வானிலே [Can You Feel The Love Tonight] [Kadhalaa yen vaanile] [English translation]
1: அது நடக்கத்தான் போகுது
2: என்ன நடக்க போகுது?
1: தேவை இல்லாதது
2: என்னது?
1: காதல் அது, யார் பேச்சும் கேட்காது. மூணு ரெண்டாச்சுது.
2: ஓ, இப்போ புரியுது
1: இந்த சாயங்கால வேற
2: ஆமா
1: ஓர் மாயம் செய்யுதே
2: ஆ, செய்யுது
1: இந்த காட்டுப்பூவெல்லாம் மலர்ந்தே ஓர் காதல்
பெய்யுதே
3&4: காதலே, என் வானிலே அமைதியாய் நின்றோம்.
உன் கால்தடம் என் பாதை தனிலே நீ வைத்தாயோ கொஞ்சம்?
3: எப்படி நான் சொல்ல? நீ கேட்க மாட்டாயோ?
என் நேற்றின் உன்மையை நான் சொன்னால், எனை விட்டு செல்வாயோ?
4: ஏன் ஒளிகிறாய் உன் உள்ளே, ஏன் என்று சொல்லடா? ஓர் பொய்யிலே நீ வாழ்கின்றாயே, என் மன்னன் நீயடா
3&4: காதலே, என் வானிலே அமைதியாய் நின்றோம்.
உன் கால்தடம் என் பாதை தனிலே நீ வைத்தாயோ கொஞ்சம்?
3&4: காதலே, என் வானிலே உன் வாசம் என் முன்பே,
நீந்திடும் இவ்வாழ்க்கை தனிலே, வாழ்வோம் வா அன்பே
1: ஓ காதலி போய் மாட்டினால், அவன் காலிடா
2: அவன் நம்மள வேனாம்னு வெட்டினா,
1&2: நம் கதை டமால் ஆகும்.
- Artist:The Lion King (OST) [2019]