பெயரில் க்ருயெல்லா [Call me Cruella] [Peyaril Cruella] [Transliteration]

  2024-06-28 02:52:59

பெயரில் க்ருயெல்லா [Call me Cruella] [Peyaril Cruella] [Transliteration]

க்ருயெல்லா டெ வில், க்ருயெல்லா டெ வில்

அவள் நெஞ்சம் ஓர் கல், பதுங்கியே நில்

க்ருஎல்லா டெ வில், க்ருஎல்லா டெ வில்

பயம் உன் கண்ணில், சுகம் என் நெஞ்சில்

ஆசை இல்லை இனிக்க

ஆவல் இல்லை அடக்க

உன்னோடு இருப்பவர்கள்

ஒரே குட்டையின் மட்டைகள்

நிஜங்கள், பொய்கள், பல ரூபத்தில்

அவள் பெயரில் க்ருயெல்லா டெ வில்

கிருக்கென்றும் பித்தென்றும் சொல்வாய்

ஆட்டத்தில் சிக்கிக்கொண்டாய்

நான் அதில் முந்திக்கொண்டேன்

தவமாய் வாழ்ந்த வாழ்க்கை, அனைத்தும் ஆனதே சக்கை

அந்த சாத்தானுக்கும் உண்டு ரசனை

முயற்சிக்கின்றேனே அன்பாய் இருக்க

ஆனால் நான் பித்தாகவே இருக்கிறேனே ஏன்

நரகம் செல்லவே நிற்கும் கூட்டத்தில்

நான் இதன் முந்தி செல்வேன் என் அலங்காரத்தில்

அடித்து துவைத்து நார்னாராக்கு

அழகதன் இடத்தை முதல் ஆக்கு

கிழிந்ததே உன் ஆடை உலகம்

இருள் துணை கொண்டு நீ என்னோடிரு

க்ருயெல்லா டெ வில், க்ருயெல்லா டெ வில்

பயம் உன் கண்ணில், சுகம் என் நெஞ்சில்

Cruella (OST) more
  • country:United States
  • Languages:Telugu, Hindi, English, Japanese, Tamil
  • Genre:Soundtrack
  • Official site:
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Cruella_(film)
Cruella (OST) Lyrics more
Cruella (OST) Also Performed Pyrics more
Excellent recommendation
Popular