உனதல்லவா [Ek Dil Ek Jaan] [Unadhallavaa] lyrics
Songs
2026-01-11 04:10:16
உனதல்லவா [Ek Dil Ek Jaan] [Unadhallavaa] lyrics
எந்தன் யாக்கை, எந்தன் வாழ்க்கை
இவை இரண்டும், இவை இரண்டும் உனதல்லவா
எந்தன் வீரம், எந்தன் ஈரம்
அவை இரண்டும், அவ்விரண்டும், அவை இரண்டும் உனதல்லவா
எந்தன் யாக்ககை
காதலும் நீ, என் மோகமும் நீ
எந்தன் பேச்சு மூச்சுமாய் வீச்சிலும் நீ
என் தாகமும் நீ நீர் மேகமும் நீ
என் ஆலநாளங்களின் தாளமும் நீ
ஒரு தியானமும் நீ, என் வேகமும் நீ
நெஞ்சுறுதி குருதி நீ, இறுதியும் நீ
என் வெற்றியும் நீ, என் தோல்வியும் நீ
என் தோள்கள் மீது விழும் வாகையும் நீ
எந்தன் நெஞ்சிலே இன்ப துன்பமோ
எந்தன் வான்விழியில் காலை மாலையோ
எந்தன் சிறி வாழ்வில் புகழ் மாட்சியோ
அவை இரண்டும், அவ்விரண்டும்
அவை இரண்டும், அவ்விரண்டும், அவை இரண்டும் உனதல்லவா
எந்தன் யாக்கை, எந்தன் வாழ்க்கை
இவை இரண்டும், இவை இரண்டும் உனதல்லவா
- Artist:Padmaavat (OST) [2018]