Frozen 2 [OST] - தோன்று நீ [Show Yourself] [Thondru nee]

Songs   2024-12-21 20:17:14

Frozen 2 [OST] - தோன்று நீ [Show Yourself] [Thondru nee]

எல்சா: நெஞ்சம் அதிருது உள்ளே

ஓர் பூகம்பம் போல்

பறக்குதே கனவுகள்

கையில் சிக்காமலே, புறாவைப் போல்

உன்னை உணர்ந்தேன்

ஓர் நட்பின் தோளைப் போல்

வந்து சேர்ந்தேன்

கரை சேரும் ஓடம் போல்

மதில் கோட்டையாய் நான் வாழ்ந்தேன்

ஒரு மர்மம் தாங்கினேன்

என்னை போலவே

நீ ஓடி ஒளியாதே

தோன்று நீ, உன் பால் முகம் காட்டு

தோன்று நீ, எங்கோ நீ

நான் தேடி வந்தது உன்னையா பதுங்காதே!

தோன்று நீ! உன்னை அடைந்தேன்

கண் மறைக்காத பாதை துன்பம் துண்டானதோ

நான் தாண்டி வந்த தூரம் எனக்கான அர்த்தம் காட்டாதோ?

யாரைப் போலவும் நான் இல்லையே

வரைமீறிடும் நிலை

இன்பங்களே உள்ளூறுதே, ஓர் காரணம் வந்ததே!!

தோன்று நீ! அச்சம் இன்றி நின்றேன்!

கடல் தாண்டி உனக்காய் வந்தேன்!

விடைகள் யாவுமே நீயடி இது ஆரம்பமே!

ஓ, தோன்று நீ, கண் முன்னே வருவாய்

வா என் முன்னே போதும் உன் போர்

ஓ மாயமே

எங்கே உன் தோள்!

ஓ, வா என் முன்னே போதும் உன் போர்

ஓ மாயமே

எங்கே உன் தோள்!

கொயர்: வாடை சேரும் பேராழி

ஞாபகங்கள் ஆறாய் சிதறி

இடூனா: வீடு சேரு பூரிப்போம்

எல்சா: விடை நான்!

எல்சா & இடூனா: தோன்று நீ! உந்தன் பலம் காட்டு

மாறு நீ புதிதாய் மாறு!

இடூனா: விடைகள் யாவுமே நீயடி

எல்சா: ஆமாம் நானே (இடூனா: ஆமாம் நானே)

எல்சா: ஓ, தோன்று நீ!

இடூனா: நீ

Frozen 2 (OST) more
  • country:United States
  • Languages:Persian, Dutch dialects, Spanish, Chinese+43 more, Portuguese, English, Norwegian, Danish, Polish, Sami, German, Japanese, Russian, Thai, Icelandic, Telugu, Hungarian, Bulgarian, Korean, Italian, French, Ukrainian, Vietnamese, Greek, Finnish, Serbian, Czech, Swedish, Tamil, Hebrew, Catalan, Chinese (Cantonese), Turkish, Slovenian, Dutch, Lithuanian, Kazakh, Arabic (other varieties), Indonesian, Malay, Croatian, Estonian, Romanian, Hindi, Latvian, Slovak, Albanian
  • Genre:Soundtrack
  • Official site:https://movies.disney.com/frozen-2
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Frozen_2
Frozen 2 (OST) Lyrics more
Frozen 2 (OST) Featuring Lyrics more
Frozen 2 (OST) Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs