Frozen 2 [OST] - சிலது மாறாது [Some Things Never Change] [Siladhu maaraadhu]
Frozen 2 [OST] - சிலது மாறாது [Some Things Never Change] [Siladhu maaraadhu]
ஆனா: இங்கு சில்லென்று அடிக்குது காற்று
நாட்கள் ஓடுது தோற்று
அந்த மேகம் போகுதே கை வீசி காற்றோடு
சோளக்கொள்ளை பொம்மையே உரமாச்சி
ஓலாஃப்: எல்லாம் சோகத்துல சுருங்கி போச்சு
ஆனா: எது மாறுமோ அதை தேடி போகாதே
ஏய், சிலது மாறாது
எந்தன் கைகளில் உன் கை போல்
சிலது நிலையானது
ஆனா & ஓலாஃப்: ஒட்டி நடக்கும் உன்னைப் போல்
ஆனா: பிளவில்லாத சுவர் ஒன்றைப் போல் என்றென்றும் மாறாது
சிலது மாறாது
நான் உன்னை ஏந்திடும் காட்சி போல்
கிறிஸ்டோஃப்: என் மீது பூவிதழ் தூவும்
வந்து , என்னை நாளைக்கு அழைத்துப் போகும்
ஸ்வென்: எப்ப சொல்ல போற நீ மோதிரம் போட போறே நீ?
கிறிஸ்டோஃப்: ஆனா , நான் சொதப்புற கலையில் மன்னன்
வேலைக்கு ஆகாதுன்னு அப்பவே சொன்னேன்
ஸ்வென்: இந்த வித்தை எல்லாம் என் கிட்ட கேப்பாய் நீ
கிறிஸ்டோஃப்: ஏய், சிலது மாறாது
அவள் மீதுள்ள காதல் போல்
சிலது நிலையானது
இம்சை கொடுக்கும் உன்னைப் போல்
நான் ஒருவாட்டி முடிவு பண்ணா செய்வேன் நான் எல்லாமும் (இல்ல?)
ஸ்வென்: சிலது மாறாது
கிறிஸ்டோஃப்: இந்த , தனிமை மாறாது
எல்சா: பொல்லாத காற்று ஏதோ ஒரு கூச்ச நான் கேட்கின்றேன்?
விரும்பட்டுமா? என் வாழ்வை தாக்க வந்த காற்று இதா
பொன்னான நாட்கள் கை நழுவ கூடாதே
நேரம் ஓட பறக்கும் உறைந்து போகவே
நான் செய்வேனே
எல்லோரும்: சில்லென்று அடிக்குது காற்று
ஓலாஃப்: அந்த நாட்களும் ஓடுது தோற்று
அனா & கிறிஸ்டோஃப்: கேட்டது கிடைச்சாச்சி நீ நன்றி சொல்வாயா
எல்லோரும்: நமக்கு கைவசம் உள்ளது போதும் எல்லோரும் இணைந்து வாழ்வோம்
எல்சா: அரெண்டெலின் கொடி ஏறும் இது வெற்றி கொண்டாட்டம்
அனா: வெற்றி கொண்டாட்டம்
எல்லோரும்: இது வெற்றி கொண்டாட்டம்
இது வெற்றி கொண்டாட்டம்
சிலது மாறாது
நேரம் போகுது காற்றைப் போல்
சிலது நிலையானது
நாளை கேள்வியாய் ஆனாலும்
நன்மை சேரட்டும் சோகம் போகட்டும் காலங்கள் உருண்டோடும்
சிலது மாறாது
அனா: என் கைகளில் உன் கை போல்
எல்சா: கைகளில் உன் கை போல்
ஓலாஃப்: கைகளில் உன் கை போல்
கிறிஸ்டோஃப்:கைகளில் உன் கை போல்
அனா: என் கைகளில் உன் கை போல்
- Artist:Frozen 2 (OST)