Goomar [கூமர்] [Ghoomar [घूमर]] lyrics

Songs   2024-12-23 02:13:21

Goomar [கூமர்] [Ghoomar [घूमर]] lyrics

இமைகளைச் சற்றே தாழ்த்துநீ

இராணி வந்துவிட்டாள்

கூமரும் என்ராணி

ஆடிட வாரீரோ

வா வா வா வந்து கூமர் கூமர் ஆட

வாராயோ வந்து கூமர் கூமர் ஆட

இளைத்த இடை சுழற்றி சுழற்றி நீயாட

என் இதயம் பறித்துச் சென்று நீயாட

உன் கையில் துடிக்கும் எந்தன் நெஞ்சம்

சுழலு சுழலுதடி ராணி

காற்சலங்கை பாட வளையல் பாட தோடு பாட

கரைந்து போகட்டும் என்பூமி

வா வா வா கூமர் கூமர் ஆட!

வா வா கூமர் கூமர் ஆட!

இதயம் எங்கிலும் காதல் பூக்குதே

கூமர் கூமர் ஆட ஹோ கூமர் கூமர் ஆட

உலகின் விலங்குகள் விலகிப் போகுதே

கூமர் கூமர் ஆடும் போது

மேளக் காரா கொட்டு கூமர்

கூமர் கூமர் கூமர் கூமர் நானாட

கூமர் கூமர் ராணியும் ஆட

கூடவே நாம் ஆட

தாளவேகம் என்ன வென்று

ஆடும் தேகம் சொல்லும் இன்று

கூமர் ஆடும் என்னைக் கண்டு

கூட்டத் தோடு அவனும் உண்டு

மேளக்காரா கொட்டு கூமர்

கூமர் கூமர் கூமர் கூமர் நானாட

கூமர் கூமர் ராணியும் ஆட

கூடவே நாம் ஆட

வாராயோ என் மன்னனே

யாக்கை எங்கும் தீபம் ஆனான்

என் உள்ளில் தீவாளி

வாழ்க்கை எங்கும் வண்ணம் சேர்த்தான்

நான் ஆனேன் ரங்கோலி (2)

உன்னில் தஞ்சம் கொண்டேன்

தேகம் மின்னக் கண்டேன்

நன்றி சொல்லி நானும் பாட

மேகம் போலே நானும் ஆட

மேளக்காரா கொட்டு கூமர்

கூமர் கூமர் கூமர் கூமர் நானாட

கூமர் கூமர் ராணியும் ஆட

கூடவே நாம் ஆட

இதயம் எங்கிலும் காதல் பூக்குதே

கூமர் கூமர் ஆட ஹோ கூமர் கூமர் ஆட

உலகின் விலங்குகள் விலகிக் போகுதே

கூமர் கூமர் ஆடும் போது

மேளக்காரா கொட்டு கூமர்

கூமர் கூமர் கூமர் கூமர் நானாட

கூமர் கூமர் ராணியும் ஆட

கூடவே நாம் ஆட

வா வா வா வா வா வா வா

வந்து கூமர் ஆடு

வா வா வாராயோ வாராயோ

வந்து கூமர் ஆடு

நிலவொன்றைப் போல மேகம் மூடி

கண்கள் மறைத்து வா

சுற்றிச் சுற்றிச் சுற்றிச் சுற்றி

நெஞ்சைக் கரைத்து

மைத்துனி நீ ஆடவா

அத்தையை அழைத்துவா

தங்கையே நீயாட வா

இராணி போல் ஆடிடவா

கூமர் கூமர் கூமர்

கூமர் கூமர் கூமராட

கூமர் கூமர் கூமர்

கூமர் கூமர் கூமராட (2)

கூமர் கூமர் கூமர்

கூமர் கூமர் கூமராட

தாமரை மேலொரு நீர்த்துளி

போலே நீ உருண்டோடி ஆட

கூமர் கூமர் கூமர்

கூமர் கூமர் கூமராட

எங்கும் விழாமலே பம்பரம்போல

நீ சுழன்றோடி ஆட..

என்னால் இயன்ற பங்களிப்பு

பிழையிருப்பின் பொறுத்தருள்க!

நன்றி!

Padmaavat (OST) [2018] more
  • country:India
  • Languages:Hindi, Tamil, Telugu, Other
  • Genre:Soundtrack
  • Official site:
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Padmaavat
Padmaavat (OST) [2018] Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs