இன்று நேற்று நாளை [Iṉṟu nēṟṟu nāḷai] [English translation]
Songs
2026-01-20 12:16:37
இன்று நேற்று நாளை [Iṉṟu nēṟṟu nāḷai] [English translation]
இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
வானவில் என் வாழ்க்கையில்
தோன்றும் முன்பு மறைந்து போன
தேன் துளி பூக்களில்
தேடும் தேனீ நான் என
காதலே என் காதலே
எங்கு போகிறாய் என் வாழ்வை வாழும் முன்
வீழ்கிறேன்
தேவதை உன்னை தேடியே
உணமையான காதல் என்று ஒன்று உள்ளது
காலம் கடந்து போன பின்பும் மண்ணில் வாழ்வது
காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டிகொண்டது
காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது
கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும்
காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும்
காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும்
கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும்
இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
- Artist:Indru Netru Naalai (OST)
- Album:இன்று நேற்று நாளை