விஸ்வாசம் தைரியம் உண்மை [Loyal Brave True] [Viswaasam Dhairiyam Unmai] [English translation]
Songs
2026-01-18 16:56:01
விஸ்வாசம் தைரியம் உண்மை [Loyal Brave True] [Viswaasam Dhairiyam Unmai] [English translation]
போர் ஓரு நாளும் தீர்வாகாதே
இருத்தும் போராடுகிறேன்
உறவுக்காக உயிரையும் நானே
பனையமாய் வைக்கிறேன்
என்னை நானே கேட்கின்றேனே
போராளியா என
என்னிடம் உண்டா இவை யாவும்
விஸ்வாசம், தைரியம், உண்மை
விஸ்வாசம், தைரியம், உண்மை
தோல்விகள் யாவும் வெற்றியின் பாதை
தான் அதை மறுக்கவில்லை
ஆபத்து என்றால் உதவிட யாரும்
ஓடியும் வருவதில்லை
என்னை நானே கேட்கின்றேனே
போராளியா என
என்னிடம் உண்டா இவை யாவும்
விஸ்வாசம், தைரியம், உண்மை
விஸ்வாசம், தைரியம், உண்மை
எதை கண்டும் அஞ்சா பெண்ணும் நானே
பயம்மேன்ற ஒன்று எனக்கில்லையே
நீ இல்லை என்றால் நானும் இல்லை
என் பலம் நீதானே
முகத்தை மறைத்த நானே
ஒரு வீரன் போல் நின்றேன்
என் தந்தை போதித்ததேல்லா
விஸ்வாசம், தைரியம், உண்மை
- Artist:Mulan (OST) [2020]