மூச்சிலே தீயுமாய் [Moochile Theeyumaay]
Songs
2026-01-16 02:00:54
மூச்சிலே தீயுமாய் [Moochile Theeyumaay]
மூச்சிலே தீயுமாய்
நெஞ்சிலே காயமாய்
வறண்டு போன விழிகள் வாழுதே
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்
தேசமே... உயிர்த்து எழு
இம் மகிழ்மதி
அண்டத்தின் அதிபதி
விளம்பாய் விளம்பாய்
ஞானத்தின் ஞாலம் இஃதே
இயம்புவாய் நெஞ்சியம்புவாய்
குறையேறா மாட்சியோடு
கறையுறாத மகிழ்மதி
திரைவீழா ஆட்சியோடு
வரையிலா இம் மகிழ்மதி
தன்னிற் றுயிற்ற துளிர்களின்
அரணே என போற்றுவாய்
எதிர்க்கும் பதர்களை
உதிர்த்து மாய்த்திடும்
அசுரனே என சாற்றுவாய்
புரிசை மத்தகம் மீதிற்
வீற்றிடும் பதாகையே நீ வாழி
இரு புரவியும் ஆதவனும்
பொன் மின்னும் அரியாசனமும்
வாழியே...