Muzhumathy [முழுமதி] [Jashn-E-Bahaara [जश्न-ए-बहारा]] [Transliteration]

Songs   2024-12-25 06:37:06

Muzhumathy [முழுமதி] [Jashn-E-Bahaara [जश्न-ए-बहारा]] [Transliteration]

முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்

மின்னல்கள் அவளது விழியாகும்

மௌனங்கள் அவளது மொழியாகும்

மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்

மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அவளை ஒருநாள் நான் பார்த்தேன்

இதயம் கொடு என வரம் கேட்டேன்

அதைக் கொடுத்தாள்

உடனே எடுத்தே சென்றுவிட்டாள்..!

முழுமதி அவளது முகமாகும்...

கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே

அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்.!

கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே

அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்..!!

ஒரு கரையாக அவள் இருக்க

மறுகரையாக நான் இருக்க

இடையில் தனிமை தழும்புதே நதியாய்..

கானல் நீரில் மீன் பிடிக்க

கைகள் நினைத்தால் முடிந்திடுமா.?

நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே..!!

முழுமதி அவளது முகமாகும்....

அமைதியுடன் அவள் வந்தாள்

விரல்களை நான் பிடித்துக் கொண்டேன்

பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்.!

உறக்கம் வந்தே தலைகோத

மரத்தடியில் இளைப்பாறி

கண்திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்..!!

அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்

தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்

கண்களில் மறையும் பொய்மான்போல் ஓடுகிறாள்.!

அவளுக்கும் எனக்கும் நடுவினிலே

திரை ஒன்று தெரிந்தது எதிரினிலே

முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா.!!

முழுமதி அவளது முகமாகும்...

Jodhaa Akbar (OST) [2008] more
  • country:India
  • Languages:Hindi, Tamil, Telugu
  • Genre:Soundtrack
  • Official site:http://www.jodhaaakbar.com/
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Jodhaa_Akbar
Jodhaa Akbar (OST) [2008] Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs