பச்சை தீ [Pachchai Thee] lyrics

Songs   2025-01-07 20:01:08

பச்சை தீ [Pachchai Thee] lyrics

பச்சை தீ நீயடா ... கச்சை பூ நானடா

ஒற்றை பார்வை கொண்டே பற்றிக்கொண்டாயடா

மான் விழிக்குள் எந்தன் வாழ்வொன்றைக்காண

மாமலை ஒன்றேறி வந்தேனடி

இதயமொன்று உள்ளதென்று உன் அணைப்பாலே கண்டேனே

இனும் என்னை இறுக்கி அணைத்திடத் துடித்தேனே

நீயே மண் மின்னும் வெண்தாரகை

தோளில் வீழ்கின்ற பூங்காரிகை

உந்தன் தோளோடு தோள் சேர்க்கிறேன்

என்னில் தோகைகள் நான் பார்க்கிறேன்

பச்சை தீ நீயடா ... கச்சை பூ நானடா

ஒற்றை பார்வை கொண்டே பற்றிக்கொண்டாயடா

கீறலில் உண்டாகும் கீதங்கள் கேட்டால்

மோதலின் மோகங்கள் கேட்டாயடி

பிறவி பல எடுத்தாலும் நிகழும் கணம் நான் மறவேனே

வலிகளை வரமென தந்திட கேட்டேனே

நீயே மண் மின்னும் வெண்தாரகை

கண்ணில் தேன் சிந்தும் பூங்காரிகை

உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்

காதல் ஆழத்தை நான் காண்கிறேன்

பச்சை தீ நீயடா ... கச்சை பூ நானடா

ஒற்றை பார்வை கொண்டே பற்றிக்கொண்டாயடா

வெற்றுக்கல் நானடா வெட்டும் உளி நீயடா

அற்பப்பாறை என்னில் சிற்பம் செய்தாயடா

Baahubali: The Beginning (OST) [2015] more
  • country:India
  • Languages:Tamil, Malayalam, Sanskrit, Hindi, Telugu
  • Genre:Soundtrack
  • Official site:
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Baahubali:_The_Beginning
Baahubali: The Beginning (OST) [2015] Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs