அன்னியர்கள் என்னைப்போல [Strangers Like Me] [Anniyargal ennaipola] [Transliteration]
Songs
2025-12-16 06:51:26
அன்னியர்கள் என்னைப்போல [Strangers Like Me] [Anniyargal ennaipola] [Transliteration]
நீ செய்வதை நானும் நானும் செய்வேனே
எப்படி செய்வது என்று சொல்லிக் கொடு
சொல்வதை செய்வது ஒன்றும் அரிது இல்லை
கற்றது தானே கைமண்ணளவு
கல்லாதது உலகின் அளவு
சின்னஞ்சிறு உலகம் எனது
ஓ, வெளியுலகம் மிகபரந்து விரிந்தது
அன்னியர்கள் என்னைப்போல
எத்தனை பேரோ இந்த உலகிலே
அவர்களிடம் என்னை போல
என்ன குணங்கள் சொல்லும் உள்ளத்திலே
அவள் நடை, அவள் செயல் யாவுமே
என் நெஞ்சில் ஆசை தூண்டுதே
அவளருகில் இருக்கவே என் மனம் ஏங்குதே
ஓ இந்த அனுபவம் புதிது
கண் கண்டதில்லை, கேட்டதுமில்லை
வானத்திலே மேகக் கூட்டத்திலே
புதிய செவ்வானம் தோன்றுகின்றது
அன்னியர்கள் என்னைப்போல
எத்தனை பேரோ இந்த உலகிலே
அவர்களிடம் என்னை போல
என்ன குணங்கள் சொல்லும் உள்ளத்திலே
வா என்னோடு என் உலகை பார்
வியக்க வைக்கும் அழகைப் பார்
என் உணர்வினை நீயும் உணர்கிறாயா?
கை கோர்த்து புதுமைகள் காணுவோம்
- Artist:Tarzan (OST)
- Album:டார்சான்