வானத்தை நான் தொடுவேனே [Touch The Sky] [Vaanathai naan thoduvene] lyrics
Songs
2025-12-16 14:26:56
வானத்தை நான் தொடுவேனே [Touch The Sky] [Vaanathai naan thoduvene] lyrics
காற்று வீசும் நேரம்
வானம் தெள்ளத் தெளிவாகும்
மேகம் சூழ்ந்த மலைகள் அழைக்கும்
கூட்டி செல் ஒளியை தேடி
ஓடுவேன் பறப்பேனே
வானத்தை நான் தொடுவேனே
பறப்பேனே
வானத்தை நான் தொடுவேனே
காட்டுக்குள்ளே மலைக்குள்ளே
ஒளிந்திருக்கும் ரகசியம் தானே
நீரில் தோன்றும் நிழல்கள் எல்லாம்
ஞாபகத்தில் நினைவலை தானே
பேசுவேனே அந்த கதைகள் எந்தன் கனவும் நெனவாகிடுமே
வீசும் புயலை நான் எதிர்ப்பேன்
தலை நிமிர்ந்து நான் நடப்பேன்
ஓடுவேன் பறப்பேனே
வானத்தை நான் தொடுவேனே
பறப்பேனே
வானத்தை நான் தொடுவேனே
பறப்பேனே
வானத்தை தொடுவேனே
பறப்பேனே
- Artist:Brave (OST)
- Album:Brave (2012) (Tamil)