முயற்சிப்பேன் [Try Everything] [Muyarchippaen] [English translation]
Songs
2025-12-05 21:40:11
முயற்சிப்பேன் [Try Everything] [Muyarchippaen] [English translation]
நானே தொலைந்தேன்
வெற்றியை தொலைத்தேன்
மீண்டும் வென்று விதையென்று முளைத்தேன்
நித்தமும் நான்
நாளையை நினைப்பேன்
வெற்றி கொடி கட்ட படி அமைப்பேன்
தோற்போமோ என்கின்ற பயம் தீரடா
பறவைகள் விழும் ஆனால் எழும் பாரடா
தோல்வி என்றால் நீ அஞ்சிருந்தால்
வழி தோன்றாது முடியும் முயன்றால்
எது வந்தாலும் நான் விட்டு விட மறுப்பேன்
முனைப்புடன் முயன்றதை முடிப்பேன்
தோல்வி என்றால் நீ அஞ்சிருந்தால்
வழி தோன்றாது முடியும் முயன்றால்
எது வந்தாலும் நான் விட்டு விட மறுப்பேன்
முனைப்புடன் முயன்றதை முடிப்பேன்
முயற்சிப்பேன்
எதையுமே
முயற்சிப்பேன்
புதிதாக தவறெல்லாம் செய்வேனே
நாள் தோறும் தவறாமல் செய்தாலும்
வெற்றி காண்பேனே
முயற்சிப்பேன்
எதையுமே
முயற்சிப்பேன்
நான் எதையுமே
- Artist:Zootopia (OST)
- Album:"Zootopia (Original Motion Picture Soundtrack)" (2016) (Tamil)