We Are One [Tamil] lyrics
We Are One [Tamil] lyrics
வாழ்க்கையில் சில விஷயங்கள் நாம என்ன நினைச்சாலும் மாத்த முடியாது
காலம் போடும் கணக்குகள் கூட்டி கழிச்சு பார்த்தாலும் நமக்கு புரியாது
வாழ்க்கை பயணம் முழுதும் மேடு பள்ளம் வந்து போகுமே
நீ விழுந்தால் நான் கை கொடுப்பேனே
மீறி எழுந்து நீ சிம்மாசனம் ஏறும் வரை நானே
உன்னை கண் இமை போல் காப்பேன்
கண்மணி கண்மணி, நீயே நான்
கண்மணி கண்மணி, நீயே நானோ
துள்ளித்திரியும் பருவத்தில் எல்லை இல்லா ஆசைகள் அடக்க முடியாது
எந்தன் இதயம் வழியே நான் இந்த உலகை பார்க்கிறேன், தடுக்க கூடாது
உலகில் வாழ்ந்து மறைவதில் அர்த்தம் இல்லையே
பிறர் உள்ளத்தில் வாழ வேண்டுமே
நாளும் மாறும் உலகில் ஒன்று மட்டும் அழியாது
அது நாம் யாரென்ற கௌரவம் தான்
கண்மணி கண்மணி, நீயே நான்
கண்மணி கண்மணி, நீயே நான்
வானம் பூமி எல்லாம் இங்கே இருக்கும் போதிலும்
சூரியன் தான் தலைவன் கண்ணே
முன்னோர்கள் சொன்ன வார்த்தைகள் எல்லாம் பொய்யல்ல
ஒரு நாள் உனர்வாய் உன்மையே
கண்மணி கண்மணி, நீயே நான்
கண்மணி கண்மணி, நீயே நான்
நீ இருக்கற வரைக்கும் இப்படி தான் இருந்தாகனும்
அத ஒரு நாள் நீ புரிஞ்சுக்குவ
கண்மணி கண்மணி, நீயே நான்
கண்மணி கண்மணி, நீயே நான்