வாழ்விடமே [Where you are] [Vāḻviṭamē] lyrics
வாழ்விடமே [Where you are] [Vāḻviṭamē] lyrics
மொவானா! உண்மை சொல்வேன்!
மொவானா நீ தெரிஞ்சுக்கோ மொடொனுயீ தானே உந்தன் வாழ்விடமே…
பழங்காலப்பாட்டுக்கே பயிற்சிசெய்தார் இங்கோ
பழைய பாடல் எங்களுக்குப் போதுமே!
பாரம்பர்யம் காக்க வேண்டும்! என் மொவானா! நீயதைச் செய்வாயோ?
கண்ணே...
தடுமாற்றம் ஆகாது உன் வாழ்வினிலே
பகிர்ந்தளிப்போம் நாமே! சிரித்துப்பேசி கூடை செய்வோம்!
மீனவர் கரை திரும்பிடக் காண்போமே!
கடல் காண்போமே…
வேண்டாம் கண்ணே!
மொவானா உன் எண்ணம் வீணே!
தலைவியாய் மாறவேண்டும்
நீதானே…
நாளும் வருமே உனக்கெதிர்க்காலமே
இன்பம் இங்கு தானே இது உன்
வாழ்விடமே…
தேங்காய்களைத் தந்திடுமே தென்னைமரமே!
பயன்கள் பல தென்னைமரம் தந்திடுமே!
தேங்காய் நாரில் வலைகள் செய்வோம்
இளநீரும் இனித்திடுமே
ஓலைச்சருகில் தீயை மூட்டி
சமைத்திடுவோம் மாமிசமே!
பயன் பல தந்திடுமே தென்னைமரமே!
தேவைகளைத்தந்திடும் தீவிதுவே!
ஆனந்தமே…
தீவெங்க்குமே... பயமில்லை பொங்கும் வளமே
எதிர்காலம் ஏற்றம் தருமே
நிச்சயமே…
மாற்றம் வருமே… உனது வாழ்க்கை பொன்னாகுமே
இன்பம் இங்கு காண்பாய் இது உன் வாழ்விடமே…!
கடல் நீரில் ஆடிடுவாய் நீ
காலடியில் அலைகளே!
கடல் நீரும் சுட்டியே… அதை மனம் விரும்புமே!
ஊரார் என்னைக் கிறுக்கென்று சொல்லுவார்
என்னைக் கண்டு சிரித்திடுவார்
மொவானா உன் விருப்பம் உணர்ந்தால் வென்றிடுவாய்!
தந்தைக்கு ஏற்றவள் நீயே! மன உறுதி கொள்வாய்!
தந்தைக்குக் கீழ்ப்படிந்தாலும் மனதில் ஓர் குரல் கேட்கும்
அந்தக் குரலுமே உன்னிடம் சொல்லும் விண்மீனைப் பின்தொடர் என்றே
மொவானா உன் மனிதின் குரலே நீயாவாய்!
தேங்காய் நாரில் வலைகள் செய்வோம்
தேங்காய் நாரில் வலைகள் செய்வோம்
இளநீரும் இனித்திடுமே!
இளநீரும் சுவைத்திடுமே!
ஓலைச்சருகில் தீயை மூட்டி
சந்தோஷமாய்ப் பாட்டுப் பாடி
சமைத்திடுவோம் மாமிசமே!
உறவுகள் சேர்ந்திடுமே!
இன்பம் காணுவாய் இங்கே… இன்பம் தான் இங்கே!
தேவைகளைத் தந்திடும் தீவிதுவே
ஆனந்தமே…
மனதில் எழுமே! என் நாடு, என் மக்கள் நலமே,
காப்பாற்றுவேன்! இன்பம் தருமே
வாழ்விடமே!
ராணியாவேன்…
மக்கள் காட்டும் பாதையில் தானே
எதிர்காலம் வேண்டிடுவேனே
வாழ்விடமே!
மறந்திடவே மாட்டோம் நாமே
வாழ்விடமே!
இன்பம் இங்கில் தானே இது நம்
வாழ்விடமே! வாழ்விடமே!
- Artist:Moana (OST)