Unnatha Vallamaiye lyrics
Songs
2026-01-25 16:40:48
Unnatha Vallamaiye lyrics
உன்னத வல்லமையே
இறைவா எனக்கு தாரும்
பரலோக வல்லமையே
இந்நேரம் ஊற்றுமய்யா
..... உன்னத வல்லமையே
உலர்ந்துப்போன எலும்புகளாய்
உலரப்பட்ட எங்களிலே
உயிர் தரும் ஆவியெ தந்து
வீரச்சேனையாய் மாற்றிடுமே
..... உன்னத வல்லமையே
வாக்களித்த வல்லமையெ
பெந்தெகொஸ்தே நாளினிலே
பொழிந்த இறைவா எங்களிலும்
நிரம்பிவழியச் செய்தருளும்
..... உன்னத வல்லமையே
அடிமைவிலங்குகள் தகர்ந்திடவே
அக்கினி ஆவியை ஈந்திடுமே
தடைகளும் களைகளும் எரிந்திடவே
மீட்ப்பின் ஆவியை ஊற்றிடுமே
..... உன்னத வல்லமையே
- Artist:K. S. Chithra
- Album:Tamil Devotional