இருலகம் [Two Worlds] [Irulagam] [English translation]
Songs
2025-12-15 20:27:12
இருலகம் [Two Worlds] [Irulagam] [English translation]
நம்பிக்கை தான் வாழ்க்கைக்கே ஆதாரம்
இருலகம் ஒரே குடும்பம்
காலத்தை நீ நம்பினால்
இவ்வாழ்க்கை கைகூடும்.
மனிதன் தீண்டா சொர்கமே...
அன்பினால் செய்த உலகம்
அமைதியை வழங்குமே...
மெல்ல மெல்ல நீ நடந்து வாராய்
இருலகம் ஒரே குடும்பம்
காலத்தை நீ நம்பினால்
இவ்வாழ்க்கை கைகூடும்.
மரங்களின் நிழலிலே...
அன்பின் குளுமை தான் ஊதும்
அமைதியை வழங்குமே...
நில் நிமிர்ந்து, பாரம் தாங்கி
உன் சுற்றத்தால் ஊக்கம்கொண்டு
மதில் எழுப்பு, தூண்கள் உயர்த்து
புது வாழ்வை வெல்ல ஓர் வீரனாக நீ வா!
தாயின் கண்ணீருக்கு ஈடில்லை...
நெஞ்சம் உடைந்தால் வாழ்வில்லை
கைகூடாதது கண் காணும் தூரம்
உன்னை தேடும் ஓர் குரலின் ஓலம்...
இருலகம் ஒரே குடும்பம்
காலத்தை நீ நம்பினால்
இவ்வாழ்க்கை கைகூடும்.
- Artist:Tarzan (OST)
- Album:டார்சான்