மனிதனின் மைந்தனே [Son of Man] [Manidhanin Maindhanae] lyrics
Songs
2025-12-15 20:21:42
மனிதனின் மைந்தனே [Son of Man] [Manidhanin Maindhanae] lyrics
உன்னில் வலிமை இருந்தால், அறிவில் விவேகம் இருந்தால்,
வெற்றி உன்னை நேரத்தில் சேரும்.
நீ செய்யும் பயணம் தன்னில் தேடும் விடைகள் கோடி.
முகில் முட்டும் மலைகள் தாண்டி பதில்கள் காணுவாய்.
மனிதனின் மைந்தனே
தடைகளை தாண்டிடு,
ஒரு நாள் வெற்றி வரும்
மனிதன் மைந்தா, மனிதன் நீ ஆவாய்
வழிகாட்ட ஒளி இல்லாமல், துணைச் செல்வோர் இல்லாமல்,
மனவுறுதி கொண்டு நீயும் ஓர் இளைஞன் ஆவாய்.
மனிதனின் மைந்தனே!
தடைகளை தாண்டிடு,
ஒரு நாள் வெற்றி வரும்
மனிதன் மைந்தா, மனிதன் நீ ஆவாய்.
கற்றபடி கற்பிப்பாய், கற்பித்து நீ அறிவாய்.
உன் மிது பாசம் கொண்டொர்பால் சேர்வாய்.
நீயும் கணாக்கள் கண்டாய், நெஞ்சில் ஆசைகள் கொண்டாய்,
இவை உன்னை சேரும் நேரம், ஒரு நொடியில் நீ காண்பாய்.
மனிதனின் மைந்தனே
தடைகளை வென்றிடு,
ஒரு நாள் வெற்றி வரும்
மனிதன் மைந்தா, மனிதன் நீ ஆவாய்.
மைந்தா! மைந்தா! மனிதனாய் ஆனாய் நீ!
- Artist:Tarzan (OST)